Posts

Showing posts from 2019

தொல்காப்பியத்தில் மெய்யியல்(தத்துவம்)

1.”மெய்யோடு இயையினும் உயிர் இயல் திரியா”-தொல்காப்பியம்,எழுத்ததிகாரம்-நூற்பா10. இலக்கணம்;-மெய் எழுத்துக்களுடன் உயிர் எழுத்துக்கள் சேர்ந்தாலும் உயிரின் அளவு (ஓசை ஒலிக்கும் அளவு) குறையாது-இது இலக்கணம். மெய்யியல்;- உயிர் முன் செய்த ஊழ்வினைக்கு (கர்மா) ஏற்ப ஏற்ற உடலுடன் சேர்ந்தாலும் உயிரின் தன்மை மாறாது. 2.”மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே” -தொல்காப்பியம்,எழுத்ததிகாரம்-நூற்பா18 இலக்கணம்;-உயிர்மெய் எழுத்துக்களில் மெய்முன்னரும் உயிர் பின்னரும் ஒலிக்கும். மெய்யியல்;-உயிர்க்கு வடிவம் இல்லை எனவே அது கொண்ட உடலின் வழி தன்னை உணர்த்துகிறது. 3.”வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையும் காலைக் காலமொடு தோன்றும்” -தொல்காப்பியம்,சொல்லதிகாரம்,வினையியல்-நூற்பா 1 இலக்கணம்;- வினைச்சொல்  ஐ,ஆல்,கு முதலிய வேற்றுமை உருபுகளை ஏற்காது,ஆராய்ந்து பார்த்தால் காலம்காட்டும். மெய்யியல்;-நாம் செய்த வினைகளுக்கு ஏற்ற நன்மை,தீமைகள் பிறரைச்சேராது நம்மையே சேரும்.அதுவும் தக்ககாலத்தில் வந்து சேரும்.இலக்கியப்பயில்வுகள்: ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்-சிலப்பதிகாரம்,தீதும் நன்றும் பிறர்தர வாரா-புறநானூறு.

வாசகன் 1000 வாழ்க்கை வாழ்வான்.படிக்காதவன் ஒரு வாழ்வே வாழ்கிறான்!

https://images.app.goo.gl/UV99cSKJxUzENx8a7

ஆதிபகவன் முதற்றே உலகு!-ஆய்வுரை

Image
                திருக்குறள்-விளக்கவுரை; 1.அறத்துப்பால்; 1;1. பாயிரவியல். 1.1.1 கடவுள்வாழ்த்து; 1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி    பகவன் முதற்றே உலகு. விளக்கம்; எல்லாமொழிகளும் 'அ' என்ற எழுத்தையே முதல் எழுத்தாகப்பெற்றுள்ளன.அதுபோலவே இவ்வுலகம் ஆதிபகவனாகிய முதல் இறைவனை முதன்மையாக உடையது. ஆய்வு; திருவள்ளுவர் ஒரு கடவுள் நம்பிக்கை உடைய ஆத்திகப்புலவர்.அவரைச்சிலர் கடவுள் நம்பிக்கை அற்றவர்போலவும்  கடவுளுக்குப் பதிலாக  சூரியனைக் குறிப்பிடுகிறார் என்பது போலவும் பலவாறாக திரித்து உரைகாண்கின்றனர்.சிலர் தமக்குப்பிடிக்காத கருத்தை இடைச்செருகல் என்றும் கூறிவிடுகின்றனர். இடைச்செருகல் என்று கூற ஆரம்பித்தால் எல்லாநூற்கருத்துக்களையுமே இடைச்செருகல் என்று கூறிவிடலாம்.                'பொருள்முதல்வாதம்' என்றால் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்கள் கூறுகின்ற கருத்தாகும்.அதாவது 'கடவுள் என்ற ஒன்று முதலில் இல்லவே இல்லை.உலகம் உள்ளிட்ட அண்டங்கள்(பொருட்கள்) இயற்கையாகவே முன்பே இருந்தன,அவை யாராலும் படைக்கப்படவில்லை'.என்று கூறுவதாகும்.               'கருத்து முதல்வாதம்' என்பது கடவ