Posts

Showing posts from August, 2015

69ஆம் விடுதலைநாள்

நாடு 69 ஆம் விடுதலைநாளைக் கொண்டாடுகிறது.இந்தியாவில் பன்முகத்தன்மை உள்ளது மதங்கள்,மொழிகள்.இனங்கள் எல்லாவற்றுக்கும் சமமரியாதை கொடுக்கப்பட வேண்டும்.நீதிமன்றங்கள் அரசியலுக்கு அஞ்சாது அறத்தை நிலைநாட்டவேண்டும். கல்வி ஏழைகளுக்கு இலவசமாய்க் கிடைக்கவேண்டும்.ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்விவரை கட்டணமின்றி.சமச்சீரானதாய் தாய்மொழிவழிக்கல்வி கற்பிக்கப் படவேண்டும்.ஆங்கிலம் இந்தியாவின் பொதுமொழியாக இருந்தால் இந்தியமக்களிடயே சமநிலை நிகழும் அது உலகத்தொடர்புக்கும் உதவும்.இந்திய ஆட்சியாளர்கள் தமிழ் இன எதிர்ப்புப் போக்கைக் கைவிடவேண்டும். இந்தி.இந்து,இந்தியா என்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான சுயநலம் சார்ந்த குற்றமாகும்.அரசு சாராயம் விற்பதும் தனியார் கல்வியை விற்பதும் மக்களுக்கு எதிரானது.ஒப்பந்த ஊழியர்களை நியமித்து குறைந்த சம்பளம் வழங்கும் கௌரவவிரிவுரையாளர்கள்.பெற்றோர் ஆசிரியர் கழக குறை ஊதிய ஆசிரியர்கள் நியமனம்,அயல்நாட்டு நிறுவனங்களை அளவுக்கு அதிகமாக வரவைத்து தொழிலாளர் உரிமைகள் கண்டுகொள்ளப்படவில்லை. இவையெல்லாம் கவணத்தில் கொள்ளப்படவேண்டும்.