Posts

Showing posts from 2017

காலன்

Image
காலம் என்றோர் காலன்! காத்திருக்கிறான் ஆவிலோலன்! ஏண்டா இப்படி ஆட்டம் போடறீங்க? வேண்டாமை  என்பதே விழுச்செல்வம்!

இன்பமா?துன்பமா?

பலகாலமாய்க் கேட்டுவந்தும் தெரியவில்லை! குயிலின் பாடுபொருள் இன்பமா?துன்பமா? ஆச்சார்ய ஹிருதயமே அறியும்! தாயைப்பிரிந்த மகள் அல்லது மகளைப்பிரிந்த தாயின் உணர்ச்சியா? அல்லது காதலின் கடுந்துயரமா?ஆண்குயில்தான் கூவுமென்று கூறுகிறார்களே?

வலைப்பூ அறிமுகம்-"அழியாச்சுடர்கள்"(azhiyasudargal.blogspot.in)

வலைப்பூ; ‘’அழியாச்சுடர்கள்’’- அமைப்பும் பயனும்;                      முனைவர் ச.இரமேஷ்,                      உதவிப்பேராசிரியர்,                      சங்கரா கலை,அறிவியல்கல்லூரி,                      ஏனாத்தூர்,காஞ்சிபுரம். முன்னுரை; ‘’ அழியாச்சுடர்கள் ‘‘என்ற தமிழ் வலைப்பூ (azhiyasudargal.blogspot.in),தமிழின் அழியாத சுடர்களாகிய நவீன இலக்கியப்படைப்பாளிகளை அறியவும் அவர்களது இலக்கியப்படைப்புகளைக் குறிப்பாகச் சிறுகதைகளை,குறுநாவல்களைப் படிக்கவுமான அரியவாய்ப்பைத் தருகிறது. அதன் ஒருபகுதியாக உள்ள ‘’உலக இலக்கியம்’’ என்ற பிரிவில் நவீன ஆங்கில இலக்கியங்கள்(சிறுகதைகள்,குறுநாவல்கள்) தமிழ் மொழிபெயர்ப்பில் படிக்கவாய்க்கின்றன.ஓர் இலக்கிய ஈடுபாடு கொண்ட படிப்பாளன் இந்த வலைப்பூவைக் கண்டால் புதையலைக்கண்டாற்போல் பூரிப்படைவான்.அத்தகைய வலைப்பூவின் அமைப்பையும் பயனையும் இக்கட்டுரை ஆராய்கிறது. வலைப்பூவின் அமைப்பு; வலைப்பூவின் முகப்பில் ‘’அழியாச்சுடர்கள்’’ என்ற தலைப்பு அமைகிறது.அதன்கீழ் ‘’நவீன இலக்கியக் கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்’’ என்ற கட்டியமொழி அமைகிறது.அதற்கும் கீழே முகப்பு,பெட்டகம்,மறுப்பு(Disclaim

மனிதர்களை அறிய வள்ளுவம்காட்டும் வழிகள்!

               மனிதர்களை அறிய வள்ளுவம் காட்டும் வழிகள்;                                   முனைவர் ச.இரமேஷ்,                                   உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,                                   ஸ்ரீசங்கரா கலை,அறிவியல் கல்லூரி,                                   ஏனாத்தூர்,காஞ்சிபுரம்-631561.        முன்னுரை; ‘மனம்’ உடையவனே  ‘மனிதன்’ ஆகிறான், இதைத்தான் தொல்காப்பியர்,           ’’ஆறறிவதுவே அவற்றொடு மனனே’’ என்றும்           ‘’மக்கள்தாமே ஆறறிவுயிரே’’   என்றும் குறிப்பிடுகிறார்.           -(பொருளதிகாரம்-இளம்பூரணம்,நூற்பாக்கள்-571,577). மனிதன் என்ற சொல்லுக்கு மக்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார், தொல்காப்பியர்.மனிதன்,மானுடன் இரண்டும் ஒரே பொருள் கொண்ட சொற்களாகும்.’மேம்பாடு’ என்பதற்கு ‘மேன்பாடு’ என இராட்லர் அகராதியும்,தமிழ் லெக்சிகன் ‘சிறப்பு’ எனவும் மதுரைத்தமிழ்ப்பேரகராதி ‘உயர்தல்’,’சிறத்தல்’,’மேலாதல்’ எனவும்,க்ரியாவின் தற்காலத்தமிழ் அகராதி ‘இருக்கும் நிலையிலிருந்து அடையும் மேலான நிலை’ எனவும் பொருள் கூறுகின்றன.எனவே மானுட அல்லது மனித மேம்பாடு என்பதற்கு ‘தற்போதுள்ள நிலையைவ