Posts

Showing posts from August, 2016

கற்கள்: -கடம்பூரன்.

                       கற்கள்:                                -கடம்பூரன். கற்கள் எப்போது தோன்றினவோ? நெருப்புக்குழம்பிலிருந்து பிரிந்து சேர்ந்து குளிர்ந்து இருகி; ஒன்று என்றாலும் பல வடிவங்களில்,வர்ணங்களில், தன்மைகளில்; எல்லாம் நம்மைக் கவர்வதில்லை, நமக்குச் சில பிடிக்கின்றன, பிறர்க்குச்சில! எல்லாகற்களும் பயன்படுகின்றன,நம்மைச்சில கற்கள் பயன்படுத்துகின்றன; செவ்வகம்,வட்டம்,முக்கோணம்,சதுரம் என நான்குவடிகளில் வடிவங்களில் அகப்படாத கட்டற்றவை சில! சிலகரடுமுரடாய் கையில்பட்டாலே குருதிகசியச்செய்கின்றன. சில வழவழப்பாய் கூழாங்கற்களாய்! எல்லோர்க்கும் கூழாங்கற்களைப் பிடிக்கின்றது காரணம்? அவற்றின் வடிவம்,நிறம்,தண்மை; அவை புண்பட்டுப்பின் பண்பட்டிருக்கின்றன,யாரையும் காயப்படுத்துவதில்லை; சில ஸ்படிகநிறம்,சிலகருப்பு,சில பழுப்பு,சிலசிவப்பென நால்வர்ணங்களில், வர்ணங்களில் அகப்படாத சிலதும்; கற்குவியல்களுக்கு இடையே நீண்ட நாளாய் சில தர்மங்கள் சட்டதிட்டங்கள் இருந்தன; அவை அத்துமீறப்படுவதால் தங்களுக்குள் சண்டை இடுகின்றன,நான்தான் பெரிதென்று; எல்லாம் மண்ணாய்ப்போகும் காலம் உண்டு,என்றாலும் பழகியதில் பயணிக்க ஆசைப