Posts

Showing posts from 2018

நதித் தாய்!

Image
மனைவி என்கிறது கர்நாடகா! மருமகள் என்கிறது தமிழ்நாடு! தாய் என்கிறான் கவி!

பிறப்பும் இறப்பும்!

Image
ஒரு புல்வெளியில் எத்தனைப்புற்கள் புதிதாக முளைக்கின்றன? எத்தனை  இறக்கின்றன?யார் அறிவார்?பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே அவை என்னதான் வாழ்ந்துவிடுகின்றன?உண்ணலும் இனம்பெருக்கலும் அன்றி,அவை உலகில் தோன்றிய காலந்தொட்டு அவை அப்படித்தான் இருக்கின்றன; சரி, மனிதனின் வாழ்க்கையில் என்ன புதுமை?மனிதன் பெரும்பாலும் இப்படித்தானே வாழ்ந்து மடிகிறான்?சிலர் மட்டுமே மனிதவாழ்வை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துகிறார்கள்.புதியன செய்கிறார்கள்,பொருள்களை இன்னும் மேம்படுத்துகிறார்கள்,வாழ்வை எளிதாக்குகிறார்கள்.இவை எல்லாமே மனிதனின் புறவாழ்வை மேம்படுத்துகின்றன.அகவாழ்க்கையை மேம்படுத்த என்ன செய்கிறோம்?என்ன செய்யவேண்டும்?மீண்டும் எண்ணுவோம்!

திருக்குறளின் புரட்சிகரக ்கருத்துகள்

திருக்குறளின் புரட்சிகரக் கருத்துக்கள் பொருளின் தேவை! பொதுவாகப்  பொருள் அழியக்கூடியது,பற்று கூடாது,என்றெல்லாம் கூறுவார்கள்.வானத்துப்பறவைகள் விதைப்பதுமில்லை,அறுவடை செய்வதுமில்லை,சேமித்துவைப்பதுமில்லை என்பார்கள்”.நிறை செல்வம் நீரிற் சுருட்டும் நெடுந்திரைகள்”என்பர் அறிவர்.நிலையாமைக்கு அது உண்மை எனினும் இருக்கும் வரை அது நிலையானது,பயனுடையது.பொருளின்றி என்ன செய்ய முடியும்?எனவே பொருளீட்டு ! என்று கட்டளை இடுகிறார் வள்ளுவர். ”செய்க பொருளை செருநர் செருக்கறுக்கும் எஃகதனின் கூரிய தில்" பிறப்பின் உயர்வும் ஒழுக்கத்தேவையும்; வேதத்தை மறந்தாலும் கற்றிடலாம் ஆனால் ஒழுக்கம் குன்றினால் பிறப்பினால் வரும் உயர்வு அந்தணர்க்குக்கெடும் என்கிறார் வள்ளுவர்.எனவே பிறப்பினால் வரும் உயர்வைவிட ஒழுக்கம் மிகத்தேவை என்கிறார்! உண்மைத்துறவு; இன்று ஆன்மீகம் பரப்புவதாகக் கூறும் மடத்துத்துறவிகள் கோடிகோடியாய் சொத்து வைத்துக்கொண்டு கணக்கு வழக்கோடு முடிகிறது அவர்களது வாழ்வு ஆனால் வள்ளுவர் கூறுகிறார் “இயல்பாகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து”344. அதாவது ஒரு துறவி செல்வம் வைத்திருந்தால

புதுக்கவிதைகள் -கடம்பூரன்.

1.யாகம் நெருப்பில் நெய்யூற்று ! ஆகுதி செய் ! ஆணவம்,கன்மம்,மாயை மும்மலங்களைப் பலியிடு! அர்ப்பனம் செய்! வரம் கேள்! விருப்பமே வேள்வி ! வென்றெடு ! சமர்ப்பயாமே! 2.ஒன்று காற்று,வானம்,தீ, நிலம்,நிலம் பறவை,விலங்கு,வண்டு, மரம்,பாம்பு, மனிதன். 3.தன்னில் குளித்தல். நான் என்னைவிட எதிலும் மிகக்குளித்ததில்லை, எதில் குளித்ததை விடவும் என்னில் குளித்ததில் அதிகம் நீங்கியிருக்கிறது அழுக்கு!   4.அம்மா! அம்மா என் அத்தனை செல்களிலும் நீயும் என் தந்தையும் ஆனால் என் இதயத்தின் செல்களில் மட்டும் நீயே! அம்மா! அடுத்த பிறவி உண்மை எனில் அதில் நான் அமீபா ஆயினும் அதன் ஒரு செல்லும் உன்னுடையதாய் இருக்கட்டும்!

மரபுக்கவிதைகள் -கடம்பூரன்

                                                   மரபுக்கவிதைகள்!                                                                                         -கடம்பூரன்                                1.  நாம் மறக்க மாட்டேமால்! நானே தானே ஏமாந்தேன்                   மானே தேனே என்றானே நன்றும் தீதும் நானறியேன்                    இன்றும் என்றும் பொய்யறியேன் கன்றும் ஆவும் தானறியும்                       உன்னை என்றும் நான்மறவேன் அன்பை என்றும் மறக்காதே                        இன்பம் என்றும் துறக்காதே                                           2.    ஓ நெஞ்சே! ஓநெஞ்சே நீதானே என்றென்றும்                               என்தோழன்; எந்தன் கடவுள் பூப்போன்ற என்னெஞ்சே புத்தின்பம்                               கொள்வாயே என்றும் புதிதாய்! கேடொன்று செய்தாலோ ஓடென்று                        சொல்வாயே ஓய்வே இலாமல்! ஏதேனும் நன்மையைச் செய்தாலோ                           என்னையே பாராட் டுவாயே!            3 .நண்பா!    வா!     வா! அன்பருள் நண்பா வாவா                             இன்பருள் தோழா வாவா நன்