Posts

Showing posts from March, 2016

தமிழ்மொழி,இலக்கியம்,கலை,பண்பாடு காத்தல் வழிகள்;

தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, கலை தக்கவைப்பு;                             -முனைவர் ச.இரமேஷ்(கடம்பூரன்)      ஒரு மனிதன் தன் தாய்மொழியை ஏன் பாதுகாக்க வேண்டும்? என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டால், ‘தன்னுடைய அடையாளத்திற்காக, தன்னுடைய முகவரிக்காக, தன்னுடைய பாதுகாப்பிற்காக’ என்று பதில் வருகிறது. தந்தை பெயர் தெரியாதவனை அநாதை என்கிறோம். மனிதன் ஒரு சமுதாய விலங்கு எனவே அவன் சேர்ந்துவாழ்வதில் பாதுகாப்பை உணர்கிறான். தன் பாதுகாப்பிற்கு என்று சிலர் வேண்டும் என நினைக்கிறான். அவன் தன்னைப்போன்ற பொருளாதாரம், தொழில் உடையவரோடு சாதியாக ஒன்று சேர்கிறான்,அதுவும் போதாதபோது பொது எதிரிக்கு எதிராக இனமாக ஒன்று சேர்கிறான். மொழியே ஒரு இனத்தின் அடையாளம்,முகவரி. எனவே ஒரு மனிதன் தன் அடையாளத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தன் தாய்மொழியைக் காக்கவேண்டும்.       இக்கட்டுரை, தமிழ்மொழி, அதன்இலக்கியம், அம்மொழிபேசும் மக்களின் பண்பாடு, அவர்களின் கலை ஆகியவற்றை எவ்வாறு அழியாமல் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதுபற்றி ஆராய்கிறது.                      1.தமிழ்மொழித் தக்கவைப்பு;   மொழிகள் சாகுமா? என்றால் மொழிகள் மட்டுமல்ல க

கட்டவிழ்ப்புப் பார்வையில் வினைக்கொள்கை:

                கட்டவிழ்ப்புப்பார்வையில் வினைக்கொள்கை.                                        முனைவர் ச.இரமேஷ்,                                        உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,                                        ஶ்ரீ சங்கரா கலை,அறிவியல் கல்லூரி,                                        ஏனாத்தூர்,காஞ்சிபுரம்.       கட்டுடைத்தல் அல்லது கட்டவிழ்ப்பு (Deconstruction) என்பது ழாக் தெரிதா(Jacques Derrida-1967) என்பவரால் விளக்கப்பட்ட பின்நவீனத்துவ சிந்தனை அல்லது ஆய்வுப்பார்வையாகும்.’’இலக்கியத்தைப் பொறுத்தவரை ‘கட்டவிழ்ப்பு’ என்பது ஒருவாசிப்பு முறை. எந்தவொரு இலக்கியப்பிரதியிலும் மையம் (எதிர்) மற்றமை  என்ற இரு (எதிரெதிர்) கூறுகள்  உண்டு. ஒருபிரதியை நாம்வாசித்தவுடன் நம்மனதில் தோன்றும் முதல்கருத்து அந்த ஆசிரியரால்  பிரதியில் முன்வைக்கப்பட்ட கருத்து (மையம்) ஆகும். கொஞ்சநேரம் கழித்து நாம் அந்தப்பிரதியை ஆய்ந்துபார்க்கும்போது நமக்கு அந்தப்பிரதியில் ஒளிந்திருக்கும் வேறுகருத்து புலனாகும்.அந்த இன்னொரு கருத்து விளிம்பு (மற்றமை) ஆகும். ஒருவாக்கியத்தைப் பலவிதமாக நாம்புரிந்துகொள்ள  வேண்டிய கட்டாயம