Posts

Showing posts from February, 2012

தமிழ்-பொருள் விளக்கம்.

தமிழ் எனில் இனிமை,நீர்மை எனப்பொருள் கூறுகிறது,பிங்கலநிகண்டு!நீர்மை எனில்  குளிரா?நெகிழ்வா? இரண்டும்.

கொற்றவை

கொற்றவை பாலை நிலத்தெய்வம்,கொற்றவன் எனில் அரசன்,பெண் என்பதால் கொற்றவை.மேலும் இருவருமே  கொலை  செய்பவர்கள்(தண்டனை).பாலை கொலை நிலம்.ஐ எனில் தலைவன்,

எண்ணை-பொருள்விளக்கம்.

எள்+நெய்=எண்ணை,கடலை நெய்,எள் நெய்,தேங்காய் நெய் என்றுதான் கூறவேண்டும்.கடலை எண்ணை என்று கூறக்கூடாது,கூறினால் கடலையும் எள்ளும் கலந்த கலப்பு எண்ணை என்றாகிவிடும்.

பையன்-பொருள்விளக்கம்.

பைய-எனில் மெதுவாக,பொறுமையாக எனப்பொருள் கூறலாம்.இவற்றை வைத்து பையன்-மெதுவாக நடப்பவன் எனப்பொருள் கொண்டால் முரண்படுகிறது,ஏன் எனில் பையன் ஓடுபவன் அல்லவா? பையன்-பசுமை,இளமை உடையவன் எனில் சரியாகிறது.பைம்பொழில்-எனில் பசுஞ்சோலை அல்லவா?

பைய-பொருள் விளக்கம்

பைய-எனில் மெதுவாக,பொறுமையாக   ஆகிய பொருள்களைக் கூறலாம்.பையக் கொடு,பையவே சென்று,ஆகிய வழக்குகள் இதனை உணர்த்தும்.

தமிழே வாழ்வு!

''இருந்தமிழே உன்னால் இருந்தேன்-வானோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்''.-தமிழ் விடு தூது.