Posts

Showing posts from September, 2016

லியோடால்ஸ்டாயின் போரும்வாழ்வும் நூலிலிருந்து...

இதை என்னால் எழுதாமல் இருக்கமுடியவில்லை! என் ஆன்மாவின் தேடலுக்கு விடைகிடைத்தது இதோ! லியோ டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் நூலில் இருந்து….              கடவுள்,உயிர்கள்,தடை,விடை என எந்தநேரமும் மனம்குழம்பியவனாய் இருந்த எனக்கு அவ்வப்போது “ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்சோதிக்கவேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி” என்றும் “நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதீர் படைகள் போல் வரும் பஞ்சமா பாதகங்கள்” என்றும் நம் தமிழ் அருளாளர்கள் கூறியவை நினைவில்வந்து ஆறுதல்தருகின்றன.அதுபோலவே லியோ டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் என்ற நூலில் ஜூலி என்பவளுக்கு மேரி என்ற புனிதமான பெண் எழுதும் பதில் கடிதம் அமைகிறது.அதிலிருந்து சில… “ஆ நம்மை ஆறுதல் செய்வதற்கு மதம் என்பது இல்லாவிட்டால் நமது வாழ்க்கையே மிகவும் துக்கமாய் போயிருக்கும்” “கிருஸ்தவ அன்பு இருக்கிறதே அடுத்தவீட்டுக்காரரை நேசி-விரோதியை நேசி என்பவைகள் ஒருவாலிபனின் அழகிய கண்கள் கற்பனையும் காதலும் கொண்ட உன்னைப்போன்ற ஒரு இளம் மங்கையிடம் தோற்றுவிக்கக் கூடிய உணர்ச்சியைவிட மிக சிலாக்யமானவை,இனிமையானவை,உயர்ந்தவை என்றே எனக்குத்தோன்றுகிறது” “நமது தெய்வீக ரட்சகர் சொல்லிய