Posts

Showing posts with the label சொல் அறிவோம்

பழையகன்னடம்-ஹளெகன்னடம் ஆனகதை!

கன்னடமொழியில் ப என்ற ஓசை ஹ என ஒலிக்கிறது.எகா-பள்ளி என்பது ஹள்ளி என ஒலிக்கிறது.இந்த அடிப்படையில் பழைய கன்னடம் என்ற சொல் பழெகன்னடம் என வழங்கிப்பின்னர் ப-ஹ ஆகி,ழ-ள ஆகி ஹள...

மாத்தாடு-பொருள் விளக்கம்

மாத்தாடு என்ற  கன்னட, தெலுங்குச்சொல் மாட்லாடு என்றும் கூறப்படுகிறது. தமிழில்'' மாற்றம்''-என்ற சொல்லுக்கு ''சொல்'' என்று பொருள்.''மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே'', ''மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்'' ஆகியவை திருவாசகங்கள் ஆகும்.''மொழிதருமாற்றம்''-என்பது திருவாலவாயுடையாரின் திருமுகப்பாசுரம் ஆகும். இவை கொண்டு இது தமிழ்ச்சொல் என அறியலாம்.           அதிகமாகப் பேசுபவரை ''வாயாடி'' என்று அழைப்போம். இதன் அடிப்படையில் மாற்றம் ஆடுதல் என்றால் சொல்லாடுதல்,பேசுதல்,பதில் கூறுதல் ஆகிய பொருள்கள் வருவதைக்காணலாம்.                     இப்பொழுது மாற்றம் ஆடுதல் எப்படி மாத்தாடு ஆனது எனப்பார்ப்போம்.'சில்லரை மாற்றிக்கொண்டு வா'-என்பதற்குப்பதில் 'மாத்திக்கொண்டு வா' எனக்கொச்சையாகச் சொல்வதே தமிழ் பேச்சு மொழியாகும். இந்த அடிப்படையில் மாற்றாடு என்ற சொல் மாத்தாடு எனக்கொச்சையாக வழங்கிற்று. எனவே மாத்தாடு என்ற சொல் தமிழே ஆகும்.மாத்தாடு-மாட்லாடு ஆகியவை ஒரே சொற்களே என்பது ...

ஔவை-தமிழும் தெலுங்கும்!

ஔவை என்ற சொல்லுக்குத்தமிழில் முதியவள் என்ற பொருள் கொள்ளலாம்,இதே பொருளில்தான் தெலுங்கில் பாட்டியை(அம்மாவின் அம்மா,அப்பாவின் அம்மா)ஔவை என அழைக்கின்றனர்!அவ்வா என உச்சரித்தாலும் குழந்தைக்குச் சொல்லித்தரும்போது அவ்வை என்றே கூறுகின்றனர்.இது எனக்குப்புதிய செய்தி!செப்பு என்ற செந்தமிழ்ச்சொல்லை தெலுங்கில் இப்பொழுதும் பயன்படுத்தக்காண்கிறோம்!

திங்கள்-தமிழும் மலையாளமும்;

திரு.பொற்கோ(முன்னைத்துணைவேந்தர்,சென்னைப்பல்கலைக்கழகம்)அவர்கள் சென்னைப்பல்கலை மலையாளத்துறையில் உரையாற்றும்போது ஒருமுறை சொன்னார்,மலையாளம் தமிழின் ஒரு மண்டலப் பேச்சுமொழி என்று!எழுத்துமாற்றத்தால் பிரிந்துவிட்டோம்!எவ்வளவு பெரிய உண்மை?தமிழுக்கும் மலையாளத்துக்கும் மிகுந்த ஒற்றுமையுண்டு!எ-டு,பறைதல்-சொல்லுதல்,வெள்ளம்-நீர்,அதுபோலவே திங்கள் என்ற சொல் தமிழில் நிலவு,மாதம்,கிழமை என்ற பொருள்களில் வருகிறது,திங்கள் என்பதற்குத்தமிழில் முதன்மைப்பொருள் நிலவு எனக்கருதுகிறேன்.சந்திரனைத்தலைமையாகக்கொண்டது திங்கள்கிழமை,சந்திரனை அடிப்படையாகக்கொண்டது மாதம்(15நாட்கள்தேய்பிறை,15நாட்கள் வளர்பிறை)மலையாளத்திலும் திங்கள் என்ற சொல் மாதம் என்ற பொருளில் பயன்பாட்டில் உள்ளது வியப்பளிக்கிறது. அதனை 'திங்களு'என்று உச்சரிக்கின்றனர்.சேரமரபினர் தானே மலையாளிகள்!தமிழினத்தின் ஒருபகுதி இப்படிப்பிரிந்தது நமக்கு இழப்புதான்.

தகராறு

சில சொற்களை அதன் பொருள் உணராது பயன்படுத்துகிறோம்.குறிப்பாக,'தகராறு'-என்ற சொல் ' சண்டையின் காரணம்' என்ற பொருள் உடையது.தகர்-சண்டை;ஆறு-வழி(காரணம்).

ஓரை{hour]

ஒரு நாழிகை-24நிமிடம்,, 60-நாழிகை-1நாள், இரண்டரைநாழிகை-ஒரு ஓரை-60நிமிடம்ஒருhour. ஓரையிலிருந்து வந்ததோ hour.

உண்மை என்றால் என்ன?

உண்மை என்றால் உள்ள பொருள்,உள்+மை, இன்மை என்றால் இல்லாப்பொருள்(பொய்),இல்+மை, என்ன  தமிழ்! என்ன தமிழ்!

ஏழ் பொழில்-பொருள் விளக்கம்.

'ஏழ் பொழில்'-என்ற சொல்லை குமரகுருபரர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் கையாள்கின்றனர்.அதன் பொருள் 'ஏழு உலகங்கள்' என்பதாகும். பொழில் எனில் சோலை என்றும் பொருள்.

தமிழ்-பொருள் விளக்கம்.

தமிழ் எனில் இனிமை,நீர்மை எனப்பொருள் கூறுகிறது,பிங்கலநிகண்டு!நீர்மை எனில்  குளிரா?நெகிழ்வா? இரண்டும்.

கொற்றவை

கொற்றவை பாலை நிலத்தெய்வம்,கொற்றவன் எனில் அரசன்,பெண் என்பதால் கொற்றவை.மேலும் இருவருமே  கொலை  செய்பவர்கள்(தண்டனை).பாலை கொலை நிலம்.ஐ எனில் தலைவன்,

எண்ணை-பொருள்விளக்கம்.

எள்+நெய்=எண்ணை,கடலை நெய்,எள் நெய்,தேங்காய் நெய் என்றுதான் கூறவேண்டும்.கடலை எண்ணை என்று கூறக்கூடாது,கூறினால் கடலையும் எள்ளும் கலந்த கலப்பு எண்ணை என்றாகிவிடும்.

பையன்-பொருள்விளக்கம்.

பைய-எனில் மெதுவாக,பொறுமையாக எனப்பொருள் கூறலாம்.இவற்றை வைத்து பையன்-மெதுவாக நடப்பவன் எனப்பொருள் கொண்டால் முரண்படுகிறது,ஏன் எனில் பையன் ஓடுபவன் அல்லவா? பையன்-பசுமை,இளமை உடையவன் எனில் சரியாகிறது.பைம்பொழில்-எனில் பசுஞ்சோலை அல்லவா?

பைய-பொருள் விளக்கம்

பைய-எனில் மெதுவாக,பொறுமையாக   ஆகிய பொருள்களைக் கூறலாம்.பையக் கொடு,பையவே சென்று,ஆகிய வழக்குகள் இதனை உணர்த்தும்.

அம்மா,அப்பா-பொருள் விளக்கம்.

அம்மா,அப்பா ஆகிய சொற்கள் பழந்தமிழில் நான் அறிந்த வரை இல்லை பக்திக்காலத்தற்கு முன்பு இல்லை.அன்னை,ஆய்,எந்தை,ஐ,-என்றே உள்ளது. அரபு மொழியில் அமு எனில் அம்மா,அபு எனில் அப்பா! எண்ணுக.தாக்கமா?