தத்துவ நோக்கில் பாரதி
தத்துவ நோக்கில் பாரதி -முனைவர் ச.இரமேஷ். ‘ தத் ’ என்ற உபநிடத மகாவாக்கியத்திற்கு ‘ அது ’- அப்பரம்பொருள் என்று பெயர் . தத்துவம் என்றால் இறைவனைப்பற்றிய உண்மை எனப்பொருள் கொள்ளலாம் . பாரதி காசியில் கல்வி பயின்றவர் . ஆகையால் வேத வேதாந்தங்களில் மெய்யுணர்வு பெற்றிருந்தார் . அவரது வாழ்வும் வாக்கும் இதை மெய்ப்பிக்கக் காணலாம் . அவரது பாடல்களில் அனைத்து மதங்களையும் ஏற்று ஒரு பொதுப்பார்வை கொண்டிருந்தாலும் அவர் ஒரு அத்வைதியாக விளங்கினார் . பாரதியை விளங்கிக்கொள்ளச் சில தத்துவ விளக்கங்களை அறிந்து பின்னர் பாரதியின் பாடல்கள் வழி அவரது தத்துவ நோக்கை ஆராய்கிறது இக்கட்டுரை . வேதாந்தம் ; வேதாந்தம் என்பதற்கு வேதத்தின் முடிந்த முடிபான அறிவு என்று பொருள் . இது பலவாகப் பிரிந்துள்ளது . அவற்றைப் பின்வருமாறு காணலாம் . ‘ த்வைதம் ’- என்றால் இரண்டு என்று பொருள் . அதாவது இறை , உயிர்கள...