திங்கள்-தமிழும் மலையாளமும்;

திரு.பொற்கோ(முன்னைத்துணைவேந்தர்,சென்னைப்பல்கலைக்கழகம்)அவர்கள் சென்னைப்பல்கலை மலையாளத்துறையில் உரையாற்றும்போது ஒருமுறை சொன்னார்,மலையாளம் தமிழின் ஒரு மண்டலப் பேச்சுமொழி என்று!எழுத்துமாற்றத்தால் பிரிந்துவிட்டோம்!எவ்வளவு பெரிய உண்மை?தமிழுக்கும் மலையாளத்துக்கும் மிகுந்த ஒற்றுமையுண்டு!எ-டு,பறைதல்-சொல்லுதல்,வெள்ளம்-நீர்,அதுபோலவே திங்கள் என்ற சொல் தமிழில் நிலவு,மாதம்,கிழமை என்ற பொருள்களில் வருகிறது,திங்கள் என்பதற்குத்தமிழில் முதன்மைப்பொருள் நிலவு எனக்கருதுகிறேன்.சந்திரனைத்தலைமையாகக்கொண்டது திங்கள்கிழமை,சந்திரனை அடிப்படையாகக்கொண்டது மாதம்(15நாட்கள்தேய்பிறை,15நாட்கள் வளர்பிறை)மலையாளத்திலும் திங்கள் என்ற சொல் மாதம் என்ற பொருளில் பயன்பாட்டில் உள்ளது வியப்பளிக்கிறது. அதனை 'திங்களு'என்று உச்சரிக்கின்றனர்.சேரமரபினர் தானே மலையாளிகள்!தமிழினத்தின் ஒருபகுதி இப்படிப்பிரிந்தது நமக்கு இழப்புதான்.

Comments

Popular posts from this blog

'மலையாளக்காற்றே வா'!----சிற்பியின் கவிதை வழி உறவுப்பாலம்!

மாத்தாடு-பொருள் விளக்கம்

தமிழ்மொழி,இலக்கியம்,கலை,பண்பாடு காத்தல் வழிகள்;