திருக்குறளின் புரட்சிகரக்கருத்துகள் குறித்த ஆய்வுகள்.

தமிழின் புரட்சி-(திருக்குறளை முன் வைத்து)
 ஏப்ரல் 19, 2012
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
முன்னது இரண்டும் அடிப்படை, பின்னது இரண்டும் பயன்.அன்பு மட்டுமே இருந்து அறம் இன்றேல் பண்பும் பயனும் இல்லை.
தமிழின் புரட்சி-1
 ஏப்ரல் 25, 2012
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக இவ் உலகு இயற்றியான்_வள்ளுவர்.பிச்சை பெற்றுத்தான் இவ்வுலகில் ஒருவன் வாழ வேண்டும் என்றால் இவ்வுலகைப் படைத்தவன் துன்புற்று அழிக!என்கிறார்.ஆனால் வடமொழிமரபு பிச்சையை போற்றுகிறது.
தமிழின் புரட்சி2
 ஏப்ரல் 26, 2012
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் திருவள்ளுவர். உழவை உயர்வு செய்கிறார் வள்ளுவர் ஆரியமோ உழவைத்
தாழ்வு செய்கிறது (சூத்திரநிலை)
தமிழின்புரட்சி.3
 ஏப்ரல் 28, 2012
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான் .திருவள்ளுவர் பிறப்பின் அடிப்படையில் சாதி இந்து மரபு கூற. தமிழ் மரபு மட்டுமே மறுக்கிறது.உலகு தழுவிய தமிழ்ப்பார்வை தன் யாதும் ஊரேபண்பைத் தமிழ் திருக்குறள் வழி காட்டுகிறது.

தமிழின்புரட்சி-4 ஏப்ரல் 28, 2012
பிரம்மச்சர்யம்.கிருகஸ்தம்.வானப்பிரஸ்தம்.சன்யாஸம் இவற்றில் கடையதை உயர்ந்ததாய் இந்துமரபு கூற தமிழமரபு இல்லறமே நல்லறமாயாக்கூறுகிறது
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை .திருவள்ளுவர்

தமிழின்புரட்சி-5
 ஏப்ரல் 29, 2012
காதலை.காமத்தைப் பொதுவாக எதிர்ப்பர் காமத்தைச் சிற்றின்பம் என்று புறக்கணிப்பர் ஆனால் தமிழ்,காதலை அன்பின் ஐந்திணை எனப் பாராட்டுகிறது காமத்தை
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு -திருவள்ளுவர்.என சிற்றின்பமல்ல பேரின்பத்தை விட உயர்ந்தது என்கிறது இது தமிழ்ப்புரட்சி அல்லவா?

தமிழின்புரட்சி-6
ஏப்ரல் 30, 2012
பெண்ணுக்கு வீடுபேறு பேசவில்லை இந்துமரபு புறநானுற்றில்கூட மகனில்லாத் தந்தைக்கு வீடில்லை என்ற குறிப்புண்டு(கோப்பெருஞ்சோழன்)ஆனால் பெண் வீடுபேறு பற்றி குறிப்பில்லை திருக்குறளில்
பெற்றால் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு எனப் பெண்ணுக்கு வீடுபேறு கூறுகின்றார்

தமிழின்புரட்சி-7
மே 1, 2012
பொதுவாய் இந்திய மக்களின் மனதில் பாவம் செய்தவன் துன்பப்படுகிறான் புண்ணியம் செய்தவன் மகிழ்வாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் உள்ளது அது சரியல்ல சரியானால் முடவன்.குருடன்.நோயாளி.துன்புற்று உழைப்பவன் எல்லோரும் பாவி என்றும் திருடியோ ஊழலாலோ பெற்ற பணம் கொண்டு உல்லாச வாழ்வு வாழ்பவன் புண்ணியம் செய்தவன் என்றும் ஆகிறது இதை மறுக்க வள்ளுவர்
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தான் இடை என்கிறார் இக்குறளுக்கு பரிமேலழகர் தவறான சனாதன இந்து மரபுக்குரிய உரை கூறுவார் வள்ளுவர் துன்புறும் மக்களை பாவிகள் என்று கூறும் கல்நெஞ்சர் அல்லர் இது தமிழின்புரட்சி

தமிழின்புரட்சி.8
 ஓகஸ்ட் 3, 2012
சடை வளர்த்தலும் மொட்டை அடித்தலும் ஆன்மீகமாகக்கருதப்படுகிறது.ஆனால் வள்ளுவரோ உலகம் பழிக்கும் தீய ஒழுக்கத்தை விட்டு விட்டால் மூடத்தனமாகிய மேற்கண்டவற்றை செய்ய வேண்டாம் என்கிறார். மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் குறள்280.

தமிழின்புரட்சி.9
 ஓகஸ்ட் 9, 2012
இன்று ஆன்மீகம் பரப்புவதாகக் கூறும் மடத்துத்துறவிகள் கோடிகோடியாய் சொத்து வைத்துக்கொண்டு கணக்கு வழக்கோடு முடிகிறது அவர்களது வாழ்வு ஆனால் வள்ளுவர் கூறுகிறார் இயல்பாகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து”344.அதாவது ஒரு துறவி செல்வம் வைத்திருந்தால் குழப்பமும் மயக்கமும் ஏற்படும் என்கிறார்.

தமிழின் புரட்சி.10
செப்ரெம்பர் 17, 2012
பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வை வள்ளுவர் எற்கவில்லை. வேதத்தை மறந்தாலும் கற்றிடலாம் ஆனால் ஒழுக்கம் குன்றினால் பிறப்பினால் வரும் உயர்வு பார்ப்பு அன்ன அந்தணர்க்கு கெடும் என்கிறார்
தமிழின்புரட்சி-11
மே 18, 2013
பொதுவாகப்  பொருள் அழியக்கூடியது,பற்று கூடாது,என்றெல்லாம் கூறுவார்கள்.வானத்துப்பறவைகள் விதைப்பதுமில்லை,அறுவடை செய்வதுமில்லை,சேமித்துவைப்பதுமில்லை என்பார்கள்”.நிறை செல்வம் நீரிற் சுருட்டும் நெடுந்திரைகள்என்பர் குமரகுருபரர்.நிலையாமைக்கு அது உண்மை எனினும் இருக்கும் வரை அது நிலையானது,பயனுடையது.பொருளின்றி என்ன செய்ய முடியும்?எனவே பொருளீட்டு ! என்று கட்டளை இடுகிறார் வள்ளுவர்.
செய்க பொருளை செருநர் செருக்கறுக்கும்
எஃகதனின் கூரிய தில்


Comments

Popular posts from this blog

'மலையாளக்காற்றே வா'!----சிற்பியின் கவிதை வழி உறவுப்பாலம்!

மாத்தாடு-பொருள் விளக்கம்

தத்துவ நோக்கில் பாரதி