Posts

Showing posts from 2012

நேருவின் மேசையில் இருந்த கவிதை

The Woods are dark and deep,  but i have promises to keep,  miles to go before i sleep,  And miles to go before i sleep.

உண்மை என்றால் என்ன?

உண்மை என்றால் உள்ள பொருள்,உள்+மை, இன்மை என்றால் இல்லாப்பொருள்(பொய்),இல்+மை, என்ன  தமிழ்! என்ன தமிழ்!

ஏழ் பொழில்-பொருள் விளக்கம்.

'ஏழ் பொழில்'-என்ற சொல்லை குமரகுருபரர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் கையாள்கின்றனர்.அதன் பொருள் 'ஏழு உலகங்கள்' என்பதாகும். பொழில் எனில் சோலை என்றும் பொருள்.

யாயும் ஞாயும் யாரோ?

what could my mother be to yours,? what kin is my father to yours any way? and what did you and i meet ever? but in real love Our hearts have mingled like red earth and pouring rain-ancient tamil poet (ananimous)

தமிழ்-பொருள் விளக்கம்.

தமிழ் எனில் இனிமை,நீர்மை எனப்பொருள் கூறுகிறது,பிங்கலநிகண்டு!நீர்மை எனில்  குளிரா?நெகிழ்வா? இரண்டும்.

கொற்றவை

கொற்றவை பாலை நிலத்தெய்வம்,கொற்றவன் எனில் அரசன்,பெண் என்பதால் கொற்றவை.மேலும் இருவருமே  கொலை  செய்பவர்கள்(தண்டனை).பாலை கொலை நிலம்.ஐ எனில் தலைவன்,

எண்ணை-பொருள்விளக்கம்.

எள்+நெய்=எண்ணை,கடலை நெய்,எள் நெய்,தேங்காய் நெய் என்றுதான் கூறவேண்டும்.கடலை எண்ணை என்று கூறக்கூடாது,கூறினால் கடலையும் எள்ளும் கலந்த கலப்பு எண்ணை என்றாகிவிடும்.

பையன்-பொருள்விளக்கம்.

பைய-எனில் மெதுவாக,பொறுமையாக எனப்பொருள் கூறலாம்.இவற்றை வைத்து பையன்-மெதுவாக நடப்பவன் எனப்பொருள் கொண்டால் முரண்படுகிறது,ஏன் எனில் பையன் ஓடுபவன் அல்லவா? பையன்-பசுமை,இளமை உடையவன் எனில் சரியாகிறது.பைம்பொழில்-எனில் பசுஞ்சோலை அல்லவா?

பைய-பொருள் விளக்கம்

பைய-எனில் மெதுவாக,பொறுமையாக   ஆகிய பொருள்களைக் கூறலாம்.பையக் கொடு,பையவே சென்று,ஆகிய வழக்குகள் இதனை உணர்த்தும்.

தமிழே வாழ்வு!

''இருந்தமிழே உன்னால் இருந்தேன்-வானோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்''.-தமிழ் விடு தூது.

தமிழ்நீ!தும்பி நான்!

''தமிழே நீயோர் பூக்காடு!நானோர் தும்பி!''-பாரதிதாசன்.

க.நெடுஞ்செழியன்

பேராசிரியர் க.நெடுஞ்செழியனின் புத்தகங்களைப் படியுங்கள்.நம் காலத்தின் சிறந்த ஆய்வாளர் அவர்.உலகாய்தம்,தொல்காப்பிய ஆய்வுகள்.அரியவை.

அம்மா,அப்பா-பொருள் விளக்கம்.

அம்மா,அப்பா ஆகிய சொற்கள் பழந்தமிழில் நான் அறிந்த வரை இல்லை பக்திக்காலத்தற்கு முன்பு இல்லை.அன்னை,ஆய்,எந்தை,ஐ,-என்றே உள்ளது. அரபு மொழியில் அமு எனில் அம்மா,அபு எனில் அப்பா! எண்ணுக.தாக்கமா?