Posts

Showing posts from 2014

குமரகுருபரரின் மீக்கற்பனை

Image
           குமரகுருபரரின் மீக்கற்பனை முனைவர் ச.இரமேஷ். சிற்றிலக்கியங்களின் பொதுவான தன்மைகளாக மிகுதியான கற்பனை , தனிமனிதப்புகழ்ச்சி , கடவுள் நம்பிக்கை , எளிய மக்கள் பற்றிய சித்திரிப்பு ஆகியவற்றைக்கூறலாம் . இவற்றில் அதீத மீக்கற்பனையே குமர   குருபரரிடத்தில் விஞ்சித்தோன்றுவதாகக் கருதலாம் .   இதனைத்தண்டி இலக்கணத்தில் உயர்வு நவிற்சி அணி அல்லது அதிசய அணி என்பர் . ‘’ மனப்படும் ஒருபொருள் வனப்பு உவந்து உரைப்புழி உலகவரம்பு இகவா நிலைமைத்து ஆகி ஆன்றோர் வியப்பத்தோன்றுவது அதிசயம் ’’1. அதாவது எல்லை மீறாது ஒரு பொருளின் தன்மையை ஆன்றோர் வியக்கும் படி கற்பனையில் உவமித்தலாகும் . அவ்வாறு வெளிப்படும் கற்பனையின் சுவைகளை இந்த ஆய்வுக்கட்டுரை வெளிப்படுத்துகிறது . குருபக்தியின் உச்சம் ; குமரகுருபரரின் குருநாதர் தருமபுர ஆதீனத்தின் நான்காம் சந்நிதானமாகிய சீர்வளர்சீர் மாசிலாமணிதேசிகர் ஆவார் . அவரைப்புகழ்ந்து வணங்கிக்குமரகுருபரர் பாடியது பண்டார மும் மணிக்கோவை என்னும் நூலாகும் . அந்நூலில் குமரகுர...

தத்துவ நோக்கில் பாரதி

Image
தத்துவ நோக்கில் பாரதி  -முனைவர் ச.இரமேஷ்.                             ‘ தத் ’ என்ற உபநிடத மகாவாக்கியத்திற்கு ‘ அது ’- அப்பரம்பொருள் என்று பெயர் . தத்துவம் என்றால் இறைவனைப்பற்றிய உண்மை எனப்பொருள் கொள்ளலாம் . பாரதி காசியில் கல்வி பயின்றவர் . ஆகையால் வேத வேதாந்தங்களில் மெய்யுணர்வு பெற்றிருந்தார் . அவரது வாழ்வும் வாக்கும் இதை மெய்ப்பிக்கக் காணலாம் . அவரது பாடல்களில் அனைத்து மதங்களையும் ஏற்று ஒரு பொதுப்பார்வை கொண்டிருந்தாலும் அவர் ஒரு அத்வைதியாக விளங்கினார் . பாரதியை விளங்கிக்கொள்ளச் சில தத்துவ விளக்கங்களை அறிந்து பின்னர் பாரதியின் பாடல்கள் வழி அவரது தத்துவ நோக்கை ஆராய்கிறது இக்கட்டுரை . வேதாந்தம் ; வேதாந்தம் என்பதற்கு வேதத்தின் முடிந்த முடிபான அறிவு என்று பொருள் . இது பலவாகப் பிரிந்துள்ளது . அவற்றைப் பின்வருமாறு காணலாம் .    ‘ த்வைதம் ’- என்றால் இரண்டு என்று பொருள் . அதாவது இறை , உயிர்கள...