புதுக்கவிதைகள் -கடம்பூரன்.
1.யாகம்
நெருப்பில் நெய்யூற்று !
ஆகுதி செய் !
ஆணவம்,கன்மம்,மாயை மும்மலங்களைப் பலியிடு!
அர்ப்பனம் செய்!
வரம் கேள்!
விருப்பமே வேள்வி !
வென்றெடு !
சமர்ப்பயாமே!
2.ஒன்று
காற்று,வானம்,தீ, நிலம்,நிலம்
பறவை,விலங்கு,வண்டு,
மரம்,பாம்பு, மனிதன்.
3.தன்னில் குளித்தல்.
நான் என்னைவிட எதிலும்
மிகக்குளித்ததில்லை,
எதில் குளித்ததை விடவும்
என்னில் குளித்ததில்
அதிகம் நீங்கியிருக்கிறது
அழுக்கு!
4.அம்மா!
அம்மா என் அத்தனை செல்களிலும் நீயும் என் தந்தையும் ஆனால்
என் இதயத்தின் செல்களில் மட்டும் நீயே!
அம்மா! அடுத்த பிறவி உண்மை எனில் அதில்
நான் அமீபா ஆயினும் அதன் ஒரு செல்லும்
உன்னுடையதாய் இருக்கட்டும்!
Comments
Post a Comment