வலைப்பூ அறிமுகம்-"அழியாச்சுடர்கள்"(azhiyasudargal.blogspot.in)
வலைப்பூ; ‘’அழியாச்சுடர்கள்’’- அமைப்பும் பயனும்;
முனைவர் ச.இரமேஷ்,
உதவிப்பேராசிரியர்,
சங்கரா கலை,அறிவியல்கல்லூரி,
ஏனாத்தூர்,காஞ்சிபுரம்.
முன்னுரை; ‘’ அழியாச்சுடர்கள் ‘‘என்ற தமிழ் வலைப்பூ (azhiyasudargal.blogspot.in),தமிழின் அழியாத சுடர்களாகிய நவீன இலக்கியப்படைப்பாளிகளை அறியவும் அவர்களது இலக்கியப்படைப்புகளைக் குறிப்பாகச் சிறுகதைகளை,குறுநாவல்களைப் படிக்கவுமான அரியவாய்ப்பைத் தருகிறது. அதன் ஒருபகுதியாக உள்ள ‘’உலக இலக்கியம்’’ என்ற பிரிவில் நவீன ஆங்கில இலக்கியங்கள்(சிறுகதைகள்,குறுநாவல்கள்) தமிழ் மொழிபெயர்ப்பில் படிக்கவாய்க்கின்றன.ஓர் இலக்கிய ஈடுபாடு கொண்ட படிப்பாளன் இந்த வலைப்பூவைக் கண்டால் புதையலைக்கண்டாற்போல் பூரிப்படைவான்.அத்தகைய வலைப்பூவின் அமைப்பையும் பயனையும் இக்கட்டுரை ஆராய்கிறது.
வலைப்பூவின் அமைப்பு; வலைப்பூவின் முகப்பில் ‘’அழியாச்சுடர்கள்’’ என்ற தலைப்பு அமைகிறது.அதன்கீழ் ‘’நவீன இலக்கியக் கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்’’ என்ற கட்டியமொழி அமைகிறது.அதற்கும் கீழே முகப்பு,பெட்டகம்,மறுப்பு(Disclaimer),பதிவு(subscribe),உலக இலக்கியம் ஆகிய சிறு பட்டியல் பெட்டிவடிவங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்கீழே நவின இலக்கியகர்த்தாக்களாகிய லா.ச.ர,புதுமைப்பித்தன்,மௌனி,க.ந.சு முதலான எழுத்தாளர்களின் படங்கள் அமைந்துள்ளன. கீழே வலைப்பூவில் இடம்பெற்றுள்ள தமிழின் நவீன படைப்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒரு படைப்பாளியின் பெயர்மேல் சொடுக்கினால் அவரது சிறுகதைகள் கீழே வரிசையாக வருகின்றன. வலைப்பூ அமைப்பில் அதற்கு அடுத்ததாக ஒருகுறிப்பிட்ட படைப்பாளியின் சிறுகதைகள் வாசகர்கள் படிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன.படைப்பாளியின் புகைப்படத்தொகுப்பும் இடம்பெற்றுள்ளது.இலக்கியம் மற்றும் இலக்கியப்பரிசுபெற்றவர்கள் பற்றிய சமகாலச்செய்திகள்,பேட்டிகள் இடம்பெற்றுள்ளன.வலைப்பூவின் கடைசியில் இந்த வலைப்பூவைப் பாராட்டும் எழுத்தாளர் ஜெயமோகன்,எஸ்.இராமகிருஷ்ணன் ஆகியோரின் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.வலைப்பூவின் இடதுபக்கத்தில் கூகுல்பிளஸ்,தளத்தில்தேட,இதையும்படிச்சுப்பாருங்க போன்ற சொடுக்கித்தலைப்புகள் இடம்பெற்றுள்ளன.கீழே தொடர்புகொள்வதற்கான (hramprasath@gmail.com) என்ற இமெயில் முகவரி இடம்பெற்றுள்ளது.இராம் பிரசாத் என்பவர் இத்தளத்தின் அமைப்பாளராக இருக்கலாம்.அதன்கீழ்ப்பகுதியில் தொலைபேசிவாயிலாக நூல்கள்வாங்க ஒருவிளம்பரம் இடம்பெற்றுள்ளது.அதன்கீழே தளத்தைவாசித்தோரின் மொத்த எண்ணிக்கை எண்மவடிவில் அமைந்துள்ளது.கீழே உலக இலக்கியம் தமிழில் என்ற தலைப்பில் ஒரு பெட்டியுள்ளது,அதனுள் உலக இலக்கியம்,உலக மொழிபெயர்ப்புக்கதைகள் தமிழில் எனவுள்ளது.அதைச்சொடுக்கினால் உலக இலக்கியப்படைப்பாளிகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.அது தனியொரு வலைப்பூவாகவே இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதன்கீழே நல்ல எழுத்தை நேசிப்பவர்கள்,பின்தொடர்பவர்கள் என்ற தலைப்பில் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.அதன்கீழ் பரண் என்ற தலைப்பில் ஆண்டுவாரியான இடுகைகள் பட்டியல் இடம்பெற்றுள்ளது.அதன்கீழே படைப்புகளை மின்னஞ்சலில் பெறுவதற்கான வாசகரின் மின்னஞ்சல் கேட்கும் பகுதியுள்ளது.அதன்கீழே தற்போது தளத்தைவாசிக்கும் வாசகரின் நாடுவாரியான எண்ணிக்கை காட்டப்படுகிறது. மொத்தத்தில் இந்த வலைப்பூவின் அமைப்பு படிக்கத்தூண்டுதாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும் படைப்பாளிகளின் வரலாற்றை அறியப்பெரிதும் உதவுகிறது எனலாம்.
வலைப்பூவின் பயன்கள்;
வலைப்பூவில் இடம்பெற்ற படைப்பாளர்களின் பட்டியல்;
அ.மாதவையா அ.முத்துலிங்கம் அ.ராமசாமி அசோகமித்திரன் அபி அம்பை அழகியபெரியவன் அறிமுகம் ஆ. மாதவன் ஆதவன்ஆத்மாநாம் ஆர்.சூடாமணி ஆவணப்படம் இந்திரா பார்த்தசாரதி இமையம் உமா மகேஸ்வரி உமா வரதராஜன் எக்பர்ட் சச்சிதானந்தம்எம்.ஏ.நுஃமான் எம்.டி.முத்துக்குமாரசாமி எம்.வி. வெங்கட்ராம் என். டி. ராஜ்குமார் எஸ். வைத்தீஸ்வரன் எஸ்.ராமகிருஷ்ணன் க.நா.சுகடித இலக்கியம் கந்தர்வன் கரிச்சான் குஞ்சு கலாப்ரியா கலாமோகன் கல்யாண்ஜி கி ராஜநாராயணன் கி. அ. சச்சிதானந்தம் கிருஷ்ணன் நம்பி கு. அழகிரிசாமி கு.ப.ரா கோணங்கி கோபிகிருஷ்ணன் கௌதம சித்தார்த்தன் ச.தமிழ்ச்செல்வன் சமயவேல் சம்பத் சா.கந்தசாமிசாரு நிவேதிதா சார்வாகன் சி. மோகன் சி.சு. செல்லப்பா சி.மணி சிட்டி சு.வெங்கடேசன் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன்சுரேஷ்குமார இந்திரஜித் சுஜாதா சூத்ரதாரி சோ.தர்மன் ஞானக்கூத்தன் தஞ்சை பிரகாஷ் தமிழவன் தமிழில் முதல் சிறுகதை தி. ஜானகிராமன் திசேரா திலீப் குமார் தேவதச்சன் தேவதேவன் தோப்பில் முஹம்மது மீரான் ந. முத்துசாமி ந.பிச்சமூர்த்தி நகுலன்நாஞ்சில் நாடன் நீல பத்மநாபன் நேர்காணல் ப.சிங்காரம் பசுவய்யா பவா செல்லதுரை பா. செயப்பிரகாசம் பாதசாரி பாமா பாரதி மணி பாவண்ணன் பி.எஸ்.ராமையா பிரபஞ்சன் பிரமிள் பிரம்மராஜன் புகைப்படங்கள் புதுமைப்பித்தன் பூமணி பெருமாள்முருகன் மகாகவி பாரதியார் மனுஷ்யபுத்திரன் மா. அரங்கநாதன் மாலன் மு.சுயம்புலிங்கம் மௌனி யுவன் சந்திரசேகர் யூமா வாசுகி ரமேஷ் : பிரேம்ரவிசுப்ரமணியன் ராஜ மார்த்தாண்டன் ராஜா சந்திரசேகர் ராஜேந்திர சோழன் லஷ்மி மணிவண்ணன் லா.ச. ராமாமிருதம் வ.கீதாவ.வே.சு ஐயர் வண்ணதாசன் வண்ணநிலவன் வல்லிக்கண்ணன் விக்ரமாதித்யன் நம்பி வித்யாஷங்கர் விமலாதித்த மாமல்லன்விருதுகள் வெங்கட் சாமினாதன் வேதசகாய குமார் வேல.இராமமூர்த்தி வைக்கம் முஹம்மது பஷீர் ஜி. நாகராஜன் ஜி.குப்புசாமிஜெயகாந்தன் ஜெயந்தன் ஜெயமோகன் ஷங்கர்ராமசுப்ரமணியன் ஸில்வியா ஹெப்சிபா ஜேசுதாசன்.
ஆகியோரின் படைப்புகளும் அவர்களது வரலாறுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
உலக இலக்கியப்படைப்பாளர்களின் பட்டியல்;
ஆண்டன் பாவ்லொவிச் செகாவ் ஆல்பெர் காம்யு இடாலோ கால்வினோ எர்னஸ்ட் ஹெமிங்வே ஃபிரான்ஸ் காஃப்கா கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் டொனால்டு பார்தெல்மே தஸ்தயேவ்ஸ்கி; நட் ஹாம்சன் பீட்டர் ஹாக்ஸ் பேர்லாகர் குவிஸ்டு மிரோஸ்லாவ் பென்கோ மிலன் குந்தேரா மொப்பஸான் யூரி நகீபின் ரேமண்ட் கார்வர் விளாதிமிர் நபொகோவ் ஜார்ஜ் லூயி போர்ஹே ஜூலியோ கொத்தஸார் ஸெல்மா லாகர் லெவ் ஹெர்மன் ஹெஸே
ஆகியோரது படைப்புகள் வரிசைப்படுத்தப்பெற்றுள்ளன.அதன்கீழே,
அச்சுதன் அடுக்கா ஆர்.சிவகுமார் எம்.ஏ. சுசீலா எஸ். ஷங்கரநாராயணன் க.சுப்பிரமணியம் க.நா.சுப்ரமண்யம் கால சுப்பிரமணியம்சா.தேவதாஸ் சி.மோகன் சுகுமாரன் சுந்தர ராமசாமி பிரமிள் பிரம்மராஜன் புதுமைப்பித்தன் ரா.கிரிதரன் ராஜகோபால் விமலாதித்த மாமல்லன்
ஆகிய தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்ப்பட்டியலும் அவர்கள் மொழிபெயர்த்த மேற்கண்ட படைப்பாளிகளின் சிறுகதைகள்,குறுநாவல்களும் இடம் பெற்றுள்ளன. இந்த வலைப்பூவைப்பற்றி புகழ்பெற்ற தற்காலத்தமிழ் எழுத்தாளர்களான ஜெயமோகனும் எஸ்.இராமகிருஷ்ணனும் பின்வருமாறு கூறுவது சாலப்பொருந்தும்.
‘’இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்’’
‘’அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்’’
இவர்களது கருத்துக்களே இத்தளத்தின் பயன்களை விளக்கப் போதுமானதாகும்.
முடிவுரை; ‘’அழியாச்சுடர்கள்’’ என்ற இந்த வலைப்பூ மிகக்குறைந்த செலவில் உலக இலக்கியங்களையும் தமிழ் மற்றும் உலக இலக்கியப் படைப்பாளிகளின் அறிமுகத்தையும் வரலாற்றையும் இலவசமாக எவ்விதக்கட்டணமும் இன்றி வாசிக்கத் தருகிறது.இவை எல்லாவற்றையும் விட படிக்கும் போது கிடைக்கும் எல்லையற்ற வாசிப்பு இன்பம் உலகையும் காலத்தையும் கவலைகளையும் மறக்கச்செய்கிறது.அப்படியான தேர்வுசெய்யப்பட்ட படைப்புகள் இந்த வலைப்பூவில் அமைந்துள்ளன எனலாம்.தமிழ் இணையதளங்களின் வலைப்பூக்களில் அழியாச்சுடர்கள் ஒரு ஆவணம் என்றால் அது மிகையில்லை.
Comments
Post a Comment