எள்+நெய்=எண்ணை,கடலை நெய்,எள் நெய்,தேங்காய் நெய் என்றுதான் கூறவேண்டும்.கடலை எண்ணை என்று கூறக்கூடாது,கூறினால் கடலையும் எள்ளும் கலந்த கலப்பு எண்ணை என்றாகிவிடும்.
பைய-எனில் மெதுவாக,பொறுமையாக எனப்பொருள் கூறலாம்.இவற்றை வைத்து பையன்-மெதுவாக நடப்பவன் எனப்பொருள் கொண்டால் முரண்படுகிறது,ஏன் எனில் பையன் ஓடுபவன் அல்லவா? பையன்-பசுமை,இளமை உடையவன் எனில் சரியாகிறது.பைம்பொழில்-எனில் பசுஞ்சோலை அல்லவா?