Posts

திருவண்ணாமலை மேல் கார்முகில்கள் திருமுழுக்கு!உலக பரிபாலனத்தளமாம்.

Image
திருவண்ணாமலை மேல் முகில் கூட்டம் சூழ்ந்து காட்சியளித்தன.ஒரு நேரம் போல் ஒரு நேரம் இல்லை அக்காட்சி! நிலையாமையே நிலையானது  போலும்.

தென்னாங்கூர்-பூரி ஜெகந்நாதர் கோயில்-படங்களுடன்.

Image
சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள்,திருப்பதி பெருமாள் போல அணிசெய்துள்ளனர் .மிகவும் அழகான கோவில் .கோயில் உள்ளே நுழைந்தவுடன் மேற்கூரையில் தசாவதார காட்சிகள் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டம்-வந்தவாசியிலிருந்து பேருந்து போகிறது.காஞ்சி செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஒருமுறை பார்த்து வரலாமே!   அப்படிப்பட்ட சிற்றூரில் அவ்வளவு அழகிய கோயிலை நான் எதிர்பார்க்கவில்லை!

திருக்குறளின் புரட்சிகரக்கருத்துகள் குறித்த ஆய்வுகள்.

தமிழின் புரட்சி -( திருக்குறளை முன் வை த்து )   ஏப்ரல் 19, 2012 ” அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ” முன்னது இரண்டும் அடிப்படை , பின்னது இரண்டும் பயன்.அன்பு மட்டுமே இருந்து அறம் இன்றேல் பண்பும் பயனும் இல்லை. தமிழின்   புரட்சி- 1   ஏப்ரல் 25, 2012 இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக இவ் உலகு இயற்றியான் _ வள்ளுவர்.பிச்சை பெற்றுத்தான் இவ்வுலகில் ஒருவன் வாழ வேண்டும் என்றால் இவ்வுலகைப் படைத்தவன் துன்புற்று அழிக!என்கிறார். ஆனால் வடமொழிமரபு பிச்சையை போற்றுகிறது. தமிழின்   புரட்சி 2   ஏப்ரல் 26, 2012 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் … திருவள்ளுவர். உழவை உயர்வு செய்கிறார் வள்ளுவர் ஆரியமோ உழவைத் தாழ்வு செய்கிறது (சூத்தி ரநிலை ) தமிழின்புரட்சி. 3   ஏப்ரல் 28, 2012 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் .திருவள்ளுவர் பிறப்பின் அடிப்படையில் சாதி இந்து மரபு கூற. தமிழ் மரபு மட்டுமே மறுக்கிறது.உலகு தழுவிய தமிழ்ப்பார்வை தன் “ யாதும் ஊரே ” பண்பைத் தம...

என் கவிதைகளில் சில.....

Skip to primary content என் புதுக்கவிதைகள் , மரபுக்கவிதைகள். About யாகம் Posted on  செப்ரெம்பர் 16, 2012 நெருப்பில் நெய்யூற்று ஆகுதி செய் ஆணவம் , கன்மம் , மாயை மும்மலங்களைப் பலியிடு! அர்ப்பனம் செய்! வரம் கேள் விருப்பமே வேள்வி வென்றெடு சமர்ப்பயாமே! ஈடுபடு! Posted on  மார்ச் 7, 2013 ஈடுபாடு இல்லாமல் எச்செயலும் செய்துழன்று மாடுபடும் துன்பமாய்த் துன்புற்று -வாடாமல் பாடுபட்டுச் செய்வதிலும் பக்குவமாய்த் திட்டமிட்டு ஈடுபட்டுச் செய்வதே மேல்! ஏங்கி இளையாது இரு! Posted on  மார்ச் 7, 2013 எதிர்பார்ப்பு இல்லாமல் ஏங்காமல் என்றும் எதிர்வரும் தொல்லையை ஏற்றால் -எதிரியும் இல்லாமல் என்றுமே இன்பமாய் வாழ்ந்திட நில்லாமல் ஓடும் கலி! என் ஆசான் பழ.முத்துவீரப்பர் மணிவிழா! Posted on  பிப்ரவரி 27, 2013 மணிவிழாக் காணுகின்ற முத்துவீ ரப்ப அணிமலர் கொண்டுன் அடியிணைகள்-வாழ்த்தி உமையும் சிவனுமாய் வாழ்வும் வளமும் அமைந்திட வேண்டினேன் நான் ஒன்று Posted on  பிப்ரவரி 27, 2013 நான்-மரம் , மண் , காற்று , வானம் , பூ , தீ , பறவை , விலங்கு , வண...