Posts

Showing posts from January, 2019

ஆதிபகவன் முதற்றே உலகு!-ஆய்வுரை

Image
                திருக்குறள்-விளக்கவுரை; 1.அறத்துப்பால்; 1;1. பாயிரவியல். 1.1.1 கடவுள்வாழ்த்து; 1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி    பகவன் முதற்றே உலகு. விளக்கம்; எல்லாமொழிகளும் 'அ' என்ற எழுத்தையே முதல் எழுத்தாகப்பெற்றுள்ளன.அதுபோலவே இவ்வுலகம் ஆதிபகவனாகிய முதல் இறைவனை முதன்மையாக உடையது. ஆய்வு; திருவள்ளுவர் ஒரு கடவுள் நம்பிக்கை உடைய ஆத்திகப்புலவர்.அவரைச்சிலர் கடவுள் நம்பிக்கை அற்றவர்போலவும்  கடவுளுக்குப் பதிலாக  சூரியனைக் குறிப்பிடுகிறார் என்பது போலவும் பலவாறாக திரித்து உரைகாண்கின்றனர்.சிலர் தமக்குப்பிடிக்காத கருத்தை இடைச்செருகல் என்றும் கூறிவிடுகின்றனர். இடைச்செருகல் என்று கூற ஆரம்பித்தால் எல்லாநூற்கருத்துக்களையுமே இடைச்செருகல் என்று கூறிவிடலாம்.                'பொருள்முதல்வாதம்' என்றால் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்கள் கூறுகின்ற கருத்தாகும்.அதாவது 'கடவுள் என்ற ஒன்று முதலில் இல்லவே இல்லை.உலகம் உள்ளிட்ட அண்டங்கள்(பொருட்கள்) இயற்கையாகவே முன்பே இருந்தன,அவை யாராலும் படைக்கப்படவில்லை...