தமிழ்மொழி,இலக்கியம்,கலை,பண்பாடு காத்தல் வழிகள்;
தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, கலை தக்கவைப்பு; -முனைவர் ச.இரமேஷ்(கடம்பூரன்) ஒரு மனிதன் தன் தாய்மொழியை ஏன் பாதுகாக்க வேண்டும்? என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டால், ‘தன்னுடைய அடையாளத்திற்காக, தன்னுடைய முகவரிக்காக, தன்னுடைய பாதுகாப்பிற்காக’ என்று பதில் வருகிறது. தந்தை பெயர் தெரியாதவனை அநாதை என்கிறோம். மனிதன் ஒரு சமுதாய விலங்கு எனவே அவன் சேர்ந்துவாழ்வதில் பாதுகாப்பை உணர்கிறான். தன் பாதுகாப்பிற்கு என்று சிலர் வேண்டும் என நினைக்கிறான். அவன் தன்னைப்போன்ற பொருளாதாரம், தொழில் உடையவரோடு சாதியாக ஒன்று சேர்கிறான்,அதுவும் போதாதபோது பொது எதிரிக்கு எதிராக இனமாக ஒன்று சேர்கிறான். மொழியே ஒரு இனத்தின் அடையாளம்,முகவரி. எனவே ஒரு மனிதன் தன் அடையாளத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தன் தாய்மொழியைக் காக்கவேண்டும். இக்கட்டுரை, தமிழ்மொழி, அதன்இலக்கியம், அம்மொழிபேசும் மக்களின் பண்பாடு, அவர்களின்...