Posts

Showing posts from 2013

ஔவை-தமிழும் தெலுங்கும்!

ஔவை என்ற சொல்லுக்குத்தமிழில் முதியவள் என்ற பொருள் கொள்ளலாம்,இதே பொருளில்தான் தெலுங்கில் பாட்டியை(அம்மாவின் அம்மா,அப்பாவின் அம்மா)ஔவை என அழைக்கின்றனர்!அவ்வா என உச்சரித்தாலும் குழந்தைக்குச் சொல்லித்தரும்போது அவ்வை என்றே கூறுகின்றனர்.இது எனக்குப்புதிய செய்தி!செப்பு என்ற செந்தமிழ்ச்சொல்லை தெலுங்கில் இப்பொழுதும் பயன்படுத்தக்காண்கிறோம்!

திங்கள்-தமிழும் மலையாளமும்;

திரு.பொற்கோ(முன்னைத்துணைவேந்தர்,சென்னைப்பல்கலைக்கழகம்)அவர்கள் சென்னைப்பல்கலை மலையாளத்துறையில் உரையாற்றும்போது ஒருமுறை சொன்னார்,மலையாளம் தமிழின் ஒரு மண்டலப் பேச்சுமொழி என்று!எழுத்துமாற்றத்தால் பிரிந்துவிட்டோம்!எவ்வளவு பெரிய உண்மை?தமிழுக்கும் மலையாளத்துக்கும் மிகுந்த ஒற்றுமையுண்டு!எ-டு,பறைதல்-சொல்லுதல்,வெள்ளம்-நீர்,அதுபோலவே திங்கள் என்ற சொல் தமிழில் நிலவு,மாதம்,கிழமை என்ற பொருள்களில் வருகிறது,திங்கள் என்பதற்குத்தமிழில் முதன்மைப்பொருள் நிலவு எனக்கருதுகிறேன்.சந்திரனைத்தலைமையாகக்கொண்டது திங்கள்கிழமை,சந்திரனை அடிப்படையாகக்கொண்டது மாதம்(15நாட்கள்தேய்பிறை,15நாட்கள் வளர்பிறை)மலையாளத்திலும் திங்கள் என்ற சொல் மாதம் என்ற பொருளில் பயன்பாட்டில் உள்ளது வியப்பளிக்கிறது. அதனை 'திங்களு'என்று உச்சரிக்கின்றனர்.சேரமரபினர் தானே மலையாளிகள்!தமிழினத்தின் ஒருபகுதி இப்படிப்பிரிந்தது நமக்கு இழப்புதான்.

தகராறு

சில சொற்களை அதன் பொருள் உணராது பயன்படுத்துகிறோம்.குறிப்பாக,'தகராறு'-என்ற சொல் ' சண்டையின் காரணம்' என்ற பொருள் உடையது.தகர்-சண்டை;ஆறு-வழி(காரணம்).

ஓரை{hour]

ஒரு நாழிகை-24நிமிடம்,, 60-நாழிகை-1நாள், இரண்டரைநாழிகை-ஒரு ஓரை-60நிமிடம்ஒருhour. ஓரையிலிருந்து வந்ததோ hour.

தமிழில் எழுதுகிறேன்!

 இ ணை ய த் தி ல்    தமி ழி ல்  எ ழு தக்  க ற்கி றே ன்  அ லைபேசி  மூலம் தமிழில் எழுதினேன் முன்பு. வலைப்பூவில் யூனிகோடு-99    பயன் படுத்துகிறேன் மிக எளிது!கணித்தமிழ் அறிஞர்களே நன்றி!நன்றி !.

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம் சிறந்த எழுத்தாளர்amuttu.netபடியுங்கள்!