தொல்காப்பியத்தில் மெய்யியல்(தத்துவம்)
1.”மெய்யோடு இயையினும் உயிர் இயல் திரியா”-தொல்காப்பியம்,எழுத்ததிகாரம்-நூற்பா10. இலக்கணம்;-மெய் எழுத்துக்களுடன் உயிர் எழுத்துக்கள் சேர்ந்தாலும் உயிரின் அளவு (ஓசை ஒலிக்கும் அளவு) குறையாது-இது இலக்கணம். மெய்யியல்;- உயிர் முன் செய்த ஊழ்வினைக்கு (கர்மா) ஏற்ப ஏற்ற உடலுடன் சேர்ந்தாலும் உயிரின் தன்மை மாறாது. 2.”மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே” -தொல்காப்பியம்,எழுத்ததிகாரம்-நூற்பா18 இலக்கணம்;-உயிர்மெய் எழுத்துக்களில் மெய்முன்னரும் உயிர் பின்னரும் ஒலிக்கும். மெய்யியல்;-உயிர்க்கு வடிவம் இல்லை எனவே அது கொண்ட உடலின் வழி தன்னை உணர்த்துகிறது. 3.”வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையும் காலைக் காலமொடு தோன்றும்” -தொல்காப்பியம்,சொல்லதிகாரம்,வினையியல்-நூற்பா 1 இலக்கணம்;- வினைச்சொல் ஐ,ஆல்,கு முதலிய வேற்றுமை உருபுகளை ஏற்காது,ஆராய்ந்து பார்த்தால் காலம்காட்டும். மெய்யியல்;-நாம் செய்த வினைகளுக்கு ஏற்ற நன்மை,தீமைகள் பிறரைச்சேராது நம்மையே சேரும்.அதுவும் தக்ககாலத்தில் வந்து சேரும்.இலக்கியப்பயில்வுகள்: ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்-சிலப்பதிகாரம்,தீதும் நன்றும் பிறர்தர வாரா-புறநான...