மாத்தாடு-பொருள் விளக்கம்
மாத்தாடு என்ற கன்னட, தெலுங்குச்சொல் மாட்லாடு என்றும் கூறப்படுகிறது. தமிழில்'' மாற்றம்''-என்ற சொல்லுக்கு ''சொல்'' என்று பொருள்.''மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே'', ''மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்'' ஆகியவை திருவாசகங்கள் ஆகும்.''மொழிதருமாற்றம்''-என்பது திருவாலவாயுடையாரின் திருமுகப்பாசுரம் ஆகும். இவை கொண்டு இது தமிழ்ச்சொல் என அறியலாம். அதிகமாகப் பேசுபவரை ''வாயாடி'' என்று அழைப்போம். இதன் அடிப்படையில் மாற்றம் ஆடுதல் என்றால் சொல்லாடுதல்,பேசுதல்,பதில் கூறுதல் ஆகிய பொருள்கள் வருவதைக்காணலாம். இப்பொழுது மாற்றம் ஆடுதல் எப்படி மாத்தாடு ஆனது எனப்பார்ப்போம்.'சில்லரை மாற்றிக்கொண்டு வா'-என்பதற்குப்பதில் 'மாத்திக்கொண்டு வா' எனக்கொச்சையாகச் சொல்வதே தமிழ் பேச்சு மொழியாகும். இந்த அடிப்படையில் மாற்றாடு என்ற சொல் மாத்தாடு எனக்கொச்சையாக வழங்கிற்று. எனவே மாத்தாடு என்ற சொல் தமிழே ஆகும்.மாத்தாடு-மாட்லாடு ஆகியவை ஒரே சொற்களே என்பது ...